2 வாரத்திலேயே ’ரெபல்’ ஓடிடியில் வெளியாகி இருப்பதால் ஜி.வி.பிரகாஷ் அதிருப்தியில் இருக்கிறார்.
நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ரெபல்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் மார்ச் 22-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் விமர்சனம் மற்றும் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
இதனிடையே, ‘ரெபல்’ படத்தினை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிட்டு விட்டார்கள். இது பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், படத்தின் ஒப்பந்தம்படி 4 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். ஆனால், எதிர்பார்த்த வசூல் இல்லை என்பதால் ஓடிடியில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வெளியீடு ஜி.வி.பிரகாஷுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தொலைபேசி வாயிலாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனென்றால் அவர் மிகவும் எதிர்பார்த்த படம் இப்படியாகிவிட்டது தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.