சூர்யாவுக்கு நாயகியாகும் ஜான்வி கபூர்

சூர்யா நடிக்கவுள்ள இந்திப் படத்தின் நாயகியாக ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சூர்யா. 

டப்பிங் பணிகள் உள்ளிட்டவற்றை இதர நடிகர்கள் முடித்தவுடன் கூறும்படி சூர்யா தரப்பிலிருந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுதா கொங்கரா இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

‘புறநானூறு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் துவங்க இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ள இந்திப் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.

சுமார் 400 கோடி பொருட்செலவில் 2 பாகங்களாக இந்தப் படத்தினை உருவாக்கவுள்ளார்கள்.

இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. தற்போது தான் அனைத்தும் முடிவு வந்துள்ளது. 

‘மஹாபாரதம்’ கதையில் உள்ள கர்ணன் கதாபாத்திரத்தை வைத்து இந்தப் படத்தை உருவாக்கவுள்ளார் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா.

இதில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கர்ணன் கதை என்பதால் இதற்கு ‘கர்ணா’ எனத் தலைப்பிட்டுள்ளார்கள். 

மேலும், கர்ணன் கதை அனைத்து மொழிகளிலும் பிரபலம் என்பதால், இந்தப் படத்தினை அனைத்து மொழிகளிலும் உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read Previous

மீண்டும் இணையும் ஆர்யா – சந்தானம்

Read Next

‘வேள்பாரி’ முயற்சியை கைவிட்ட ஷங்கர்