சிவகார்த்திகேயன் படத்தின் பட்ஜெட் பெருமளவு அதிகரித்துவிட்டதால், பெரும் சிக்கலில் இருக்கிறார்கள்.
‘அயலான்’ படத்தினைத் தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதனை சோனி நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்து வந்தது. இதில் நாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை காஷ்மீரில் படமாக்கியுள்ளது படக்குழு. முதலில் இந்தப் படத்துக்கு திட்டமிட்டப்பட்ட பட்ஜெட் விட, தற்போது பெருமளவு அதிகரித்துவிட்டது.
படம் நன்றாக வந்திருப்பதால் அமைதி காக்கிறது படக்குழு.
மேலும், இந்தப் படத்தின் தயாரிப்பு பொறுப்பிலிருந்து சோனி நிறுவனம் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த செலவும் தற்போது ராஜ்கமல் நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் மட்டுமே இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிக்க இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது என்கிறது படக்குழு.
ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் அல்லது பிப்ரவரி 17-ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாள் அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருகிறது.