சூர்யா படத்தை தவறவிட்டதில் மிகவும் கவலையுடன் இருக்கிறார் ஸ்ரீலீலா.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க தயாராகவுள்ள படம் ‘புறநானூறு’.
2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீலீலாவும் ஒருவர். இவர் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்.
சூர்யா படத்தின் மூலம் தமிழிலும் முன்னணி நாயகி ஆகிவிட வேண்டும் என்று கணக்கிட்டார்.
ஆனால், இந்த கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும் என்று கூறிவிட்டார் சுதா கொங்கரா. அதற்குப் பிறகு நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்துவிட்டார். இதனால் ஸ்ரீலீலா பயங்கர அப்செட்.
தற்போது தமிழில் பேச்சுவார்த்தையில் உள்ள பல்வேறு படங்களுக்கு ஸ்ரீலீலாவை தேர்ச்சி செய்கிறார்கள். விரைவில் ஏதேனும் ஒரு படத்தில் அம்மணியை நாயகியாக பார்க்கலாம்.