ராஜமெளலி – மகேஷ் பாபு படம்: இந்தோனேசியா நடிகையிடம் பேச்சுவார்த்தை

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நடிக்க இந்தோனேசியா நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

உலகளவில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலியின் அடுத்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. எந்தவித அவசரமும் பட வேண்டாம் என்று பொறுமையாக தனது அடுத்தப் படத்தின் முதற்கட்ட பணிகளை கவனித்து வருகிறார் ராஜமெளலி.

இந்தப் படத்தின் நாயகனாக மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த ஆண்டு படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக உடற்பயிற்சி செய்து வருகிறார் மகேஷ் பாபு. 

மேலும், இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாக உள்ளது. சுமார் 2000 கோடி ரூபாய் பொருட்செலவில் 2 பாகங்களையும் உருவாக்க உள்ளது படக்குழு.

இதன் நாயகியாக நடிக்க இந்தோனேசியா நடிகை செல்சி எலிசெபத் இஸ்லானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. 

அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.வெளிநாட்டு நடிகை என்பதால் அவருக்கான விசா உள்ளிட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.

Read Previous

தமிழில் நாயகனாகும் சிவராஜ்குமார்

Read Next

’சூப்பர் டீலக்ஸ்’ ஆஸ்கர் தேர்வு இல்லை, விஜய் சேதுபதி வருத்தம்