நடிகர் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய படங்கள் பற்றிய அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாகவே வந்து கொண்டிருக்கிறது.
நான்கு தினங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ இப்போதுதான் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஆனால், நேற்று வெளியான கமல்ஹாசனின் 234வது படமான ‘தக் லைப்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ 24 மணி நேரத்திற்குள்ளகாகவே 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஷங்கர் – கமல்ஹாசன் – அனிருத் கூட்டணியை விடவும், மணிரத்னம் – கமல்ஹாசன் – ஏஆர் ரகுமான் கூட்டணிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணி 27 வருடங்களுக்குப் பிறகும், மணிரத்னம், கமல்ஹசான் கூட்டணி 36 வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் இணைகிறது.
‘இந்தியன் 2’ வீரசேகரன் சேனாபதி மற்றும் ‘தக் லைப்’ ரங்கராய சக்திவேல் நாயக்கன் ஆகியோருக்கு இடையேயான இப்போதை வீடியோ போட்டியில் இரண்டாமவர் தான் முந்திச் செல்கிறார்.