‘தங்கலான்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தங்கலான்’.

சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலால் தங்க வயலில் (கேஜிஎப்) நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம், மாளவிகா, பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பதால் இப்படம் மீதான அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தை 2024 ஜனவரி 26ம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் டீசரை நவம்பர் 1ம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

விஜய ராம ராஜு நடிக்கும் “அர்ஜுன் சக்ரவர்த்தி”

Read Next

லியோ – அமெரிக்கா வசூலில் சாதனை

Most Popular