விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் உலக அளவில் ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய வசூலுடன் அமெரிக்காவில் 5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 41 கோடியே 50 லட்ச ரூபாய். அமெரிக்கா வினியோக உரிமை 18 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல். அதன்படி பார்த்தால் ‘லியோ’ படம் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் 5 மில்லியன் வசூலைப் பெற்றுள்ள 5வது தமிழ்ப் படம் ‘லியோ’. விஜய் நடித்து வெளிவந்த படங்களில் அந்த சாதனையைப் புரிந்த முதல் படம்.
#LEO into the $𝟓𝐌 club & counting 🔥
இதற்கு முன்பு வெளியான படங்களில் 5 மில்லியன் வசூலைப் பெற்ற படங்கள்…
ஜெயிலர் – 6.9 மில்லியன்
பொன்னியின் செல்வன் 1 – 6.7 மில்லியன்
2.0 – 5.6 மில்லியன்
பொன்னியின் செல்வன் 2 – 5.25 மில்லியன்