சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ டீசர் வெளியீடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்தியா படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் 'மைக்கேல்'. 

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். 

மைக்கேல்' படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுஷும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர். இந்தி பதிப்பின் டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

டீசரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் கதை எண்பதுகளில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் பின்னணி இசை அமைக்கிறார். படத்திற்கான வசனங்களை திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

தீபாவளி வெளியீடாக ‘ப்ரின்ஸ்’ வருவதில் மகிழ்ச்சி – சிவகார்த்திகேயன்

Read Next

‘நித்தம் ஒரு வானம்’, நவம்பர் 4ம் தேதி வெளியீடு