ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து ரா கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா மற்றும் நடிக்கும் 'நித்தம் ஒரு வானம்' படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். படம் பார்த்து முடித்து திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் போது நிச்சயம் கதை குறித்து பாசிட்டிவாக உணர்வார்கள்,” என்கிறார் இயக்குநர் ரா கார்த்திக்.
ஒரு ‘பீல் குட்’ படமாக இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என நம்புகிறார் இயக்குனர்.
வெவ்வேறு காலகட்டங்களில், சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.