கதாநாயகனாக அறிமுகம் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் “ஹிட் லிஸ்ட்”  படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கே செல்லுலாய்ட்ஸ் தயாரிப்பில் இதற்கு முன்பு உருவான ‘தெனாலி, கூகுள் குட்டப்பா’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்”.

சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்க, சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அறிமுக விழா மற்றும் பூஜையில் எண்ணற்ற  திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரியாளர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

இப்படத்தின் பூஜையில் இன்று திரைப் பிரபலங்கள் ஆர்பி சௌத்ரி, சத்யஜோதி தியாகராஜன், PL தேனப்பன், சுரேஷ் காமாட்சி, இயக்குநர்கள் எழில், எஸ்ஏ சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா,  பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ்  உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன்,  படம் வெற்றிபெற  படக்குழுவினரை வாழ்த்தினர்.

விழாவுக்கு வந்தவர்களை விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார் வரவேற்றனர்.

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி, ஆக்சன், கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளது.

படம் குறித்த  மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

Read Previous

இரண்டு பாகங்களாக வருகிறது ‘விடுதலை’

Read Next

நட்சத்திரம் நகர்கிறது – விமர்சனம்

Most Popular