புத்தம் புதிய களத்தில், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.
ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாக திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.
மாமனிதன், வேழம் படங்களுடன் “மாயோன்” திரைப்படம் வெளியானது மற்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் கூட்டத்தால் இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து வருகிறது.
மாயோன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பெரும் பொருட்ச் செலவில், நமது பாரம்பரிய பெருமைகளை பறை சாற்றும் விதமாக பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய தொழில் நுட்ப கலைஞர்களுடன் ஒரு அதிரடி திரில்லராக மாயோன் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது .