எஸ்தல் என்டர்டெயினர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, விஜயகுமார் இயக்கும் படம் ‘அழகிய கண்ணே’.
இப்படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.