ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், காயத்ரி நடிக்கும் படத்திற்கு ‘இடி முழக்கம்’ என்ற தலைப்பை அறிவித்திருக்கிறார்கள்.
டைட்டில் போஸ்டரை நடிகரும், தயாரிப்பாளரும் எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.
கிராமப்புற ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடந்து வருகிறது.