நாயகனாக நடிக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்

‘உறியடி’, விரைவில் வெளியாக இருக்கும் படங்களான ‘பன்னிக்குட்டி, கடைசி விவசாயி, சத்திய சோதனை,” மற்றும் தர்புகா சிவா இயக்கும் ‘முதல் நீ முடிவும் நீ’ போன்ற படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம்.

அவர் அடுத்து தயாரிக்க உள்ள படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்க உள்ளார். இவர் தற்போது பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கி வருகிறார். 

அவர் இயக்கும் இந்த புதிய படம், ஒரு சமூகப் பிரச்சினை பற்றி பேசக் கூடிய ஒரு படம். 

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தூத்துக்குடி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது. 

Read Previous

தனுஷ் 43 – படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

Read Next

தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி ரத்து – தமிழ்நாடு அரசு

Most Popular