கேஜேஆர் ஸ்டுடியோஸ் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாக்டர்’.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
‘கோலமாவு கோகிலா’ படத்திற்குப் பிறகு நெல்சன் இயக்கி வரும் படம் இது. இப்படத்தை முடித்துவிட்டு விஜய் நடிக்க உள்ள அவரது 65வது படத்தை இயக்கப் போகிறார் நெல்சன்.
‘டாக்டர்’ இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.