விஷால், ஆர்யா இணையும் ‘எனிமி’

“அரிமா நம்பி, இரு முகன், நோட்டா” படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘எனிமி’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

பாலா இயக்கத்தில் 2011ல் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு விஷால், ஆர்யா இருவரும் இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

தமன் இசையமைக்க மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் தயாரிக்கும் படம் இது. இவரது தயாரிப்பில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளை யானை’ விரைவில் வெளியாக உள்ளது.

‘எனிமி’ படத்தின் டைட்டிலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Read Previous

‘அயலான்’ கடைசி கட்டப் படப்பிடிப்பு ஆரம்பம்

Read Next

4 கோடி பார்வைகளைத் தாண்டிய ‘மாஸ்டர்’ டீசர்

Most Popular