லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.
இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது.
மிக விரைவாக 1 மில்லியன் லைக்ஸ்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்த டீசர் தற்போது 4 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
விஜய் நடித்து வெளிவந்த படங்களின் டீசர்களில் ‘மெர்சல்’ டீசர்தான் 4 கோடியே 53 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை ‘மாஸ்டர்’ டீசர் விரைவில் முறியடிக்கலாம்.
மேலும், 2.4 மில்லியன் லைக்ஸ்களையும் இதுவரை பெற்றுள்ளது.
‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது