24 எ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அயலான்’.
கொரானோ தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் கதை ஏலியன் (வேற்றுக்கிரகவாசி) சம்பந்தப்பட்ட கதை. அதனால், படத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றையெல்லாம் செய்து முடிக்க கால அவகாசம் தேவை. அதனால் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இப்படத்தின் அப்டேட்கள் இனி அடிக்கடி வெளியாகும் எனத் தெரிகிறது.