டோக்கியோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ‘கிரேஸி’ மோகன் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக உலகத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் மறைந்த கிரேஸி மோகன்.

6500 மேடை நாடகளுக்கு மேல் அவருடைய நாடகங்கள் மேடையேறி இருப்பது தனிப் பெரும் சாதனை.

கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் தொடங்கிய அவருடைய திரைப்பயணம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் தனி முத்திரையைப் பதித்தது.

கடந்த வருடம் ஜுன் 10ம் தேதி மறைந்த கிரேஸிமோகனின் முதலாம் வருட சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை டோக்கியோ தமிழ்ச்சங்கம் நேரலை நிகழ்வாக நடத்த உள்ளது. அதில் கமல்ஹாசன் முன்னிலை வகிக்க உள்ளார்.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்வில் நாசர், பிரபு, குஷ்பு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சந்தானபாரதி, முனைவர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

கிரேசி மோகனின் தம்பி மாது பாலாஜி, அவர்களது நாடக் குழுவினர், நடிகர் நாசர் மற்றும் டோக்கிய தமிழ்ச்சங்கத் தலைவர் ஹரிநாராயணன் இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Read Previous

பெண்குயின் – டீசர்

Read Next

விக்ரம் – துருவ் விக்ரம் படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

Most Popular