விக்ரம் – துருவ் விக்ரம் படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

‘பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம்’ படங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் விக்ரம், அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளார்கள்.

துருவ் விக்ரம் கடந்த வருடம் வெளிவந்த ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இரண்டாவது படத்திலேயே அப்பாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரிக்க உள்ளார்.  விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தை இணைந்து தயாரிக்கும் லலித்குமார் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

விக்ரமின் 60வது படமாக இப்படம் உருவாக உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

இப்படத்தை 2021ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

டோக்கியோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ‘கிரேஸி’ மோகன் நினைவேந்தல் நிகழ்வு

Read Next

பற்ற வைத்த நெருப்பொன்று – டீசர்