சிம்பு திருமண வதந்தி, பெற்றோர் அறிக்கை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு திருமணம் பற்றி சில ஊடகங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.

அதற்கு மறுப்பு தெரிவித்து சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிகை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளனர்.

Read Previous

எம்.ஜி.ஆர், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்த படங்கள்

Read Next

எம்.ஜி.ஆர், கே.வி.மகாதேவன் இணைந்த படங்கள்