இளையராஜாவுக்கு இசை வாழ்த்துப் பாடும் இசைக்குழுவினர் – வீடியோ

இசையமைப்பாளர் இளையராஜா ஜுன் 2ம் தேதியன்று அவருடைய 78வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அவருடைய இசைக்குழுவில் இருக்கும் கலைஞர்கள் அவருக்காக இசை வாழ்த்தையே கொடுத்திருக்கிறார்கள். காணொலி காட்சி மூலம் அந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதை வீடியேவாக்கி இளையராஜாவின் யு டியூப் சேனலில் பதிவேற்றி இருக்கிறார்கள். 

இளையராஜாவுக்கு ‘ஹேப்பி பர்த்டே’ பாடிவிட்டு அவருடைய இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்களை குழுவினர் வாசித்துள்ளார்கள். அவற்றை இளையராஜா ரசித்துக் கேட்டுப் பாராட்டியுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்ததும் தன் இசைக் கலைஞர்களுக்கு ‘மாஸ்க்’ போடாமல் வெளியில் செல்லாதீர்கள் என அறிவுரை வழங்கினார்.

வீடியோ கீழே…

Read Previous

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் தெரியுமா ?

Read Next

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்த படங்கள்

Most Popular