காதலியுடன் புகைப்படம், கமெண்ட், பிளாக் – விஷ்ணு விஷால் கோபம்

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நட்ராஜ் மகள் ரஜினியை திருமணம் செய்து பின் விவகாரத்து பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

விஷ்ணு விஷாலும், பாட்மின்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரானோ ஊரடங்கு காரணமாக காதலன் விஷ்ணுவை பிரிந்திருப்பதை நினைத்து அவருடன் இருக்கும் சில புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஜுவாலா.

அதை ரிடிவீட் செய்த விஷ்ணு விஷால், “இப்போது சமூக விலகல்தான் மிகவும் முக்கியம். அனைவருக்காகவும் பிரார்த்திக்கவும்,” என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவருடைய ரிடிவீட்டில் பலரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கமெண்ட் செய்தனர்.

அதனால், கோபமடைந்த விஷ்ணு விஷால், “டிவிட்டரில் 20 இழிவான நபர்களை பிளாக் செய்துவிட்டேன். மகிழ்ச்சியாக உணர்கிறேன்,” என பதிவிட்டுள்ளார்.

Read Previous

நோட்டீஸ் சர்ச்சைகளுக்கு நடிகை கௌதமி விளக்கம்

Read Next

ஆர்ஆர்ஆர் – ராமராஜு கதாபாத்திரம் – வீடியோ