திருமண வதந்தியை மீண்டும் மறுத்த அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு அவர் தனது படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டார். அதற்குப் பின் ‘பாகமதி’ என்ற ஒரே படம்தான்அவர் நடித்து வெளிவந்தது-

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகியுள்ள ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இதனிடையே, கடந்த சில வாரங்களாக அனுஷ்காவுக்கும், அவர் நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த வதந்தியை மறுத்துள்ளார் அனுஷ்கா.

எந்த செய்தியும் உண்மையில்லை. அப்படியான வதந்திகள் என்னை பாதிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் எனது திருமணம் ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்று தெரியவில்லை. யாரும் அவர்களது உறவை மறைக்க மாட்டார்கள். என்னுடைய திருமணத்தை நான் ஏன் மறைக்கப் போகிறேன். இது ஒரு சென்சிட்டிவ்வான விஷயம், மக்களும் அதை சென்சிட்டிவ்வாக அணுக வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது புதிய படங்களில் நடிக்க அனுஷ்கா கதை கேட்டு வருகிறாராம். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

Read Previous

வெயில் – உருகுதே…..பாடல் அனுபவம், வசந்தபாலன் பதிவு

Read Next

ஹைதராபாத் பெண் பிரபலங்களில் சமந்தா முதலிடம்