விஜய் நடித்த ‘கண்ணுக்குள் நிலவு’, விக்ரம் நடித்த ‘காசி’, சரத்குமார் நடித்த ‘சமுத்திரம்’, மற்றும் ‘புன்னகைப் பூவே’ ஆகிய படங்ளில் நடித்தவர் காவேரி.
தெலுங்கில் கல்யாணி என்ற பெயரில் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, பின்னர் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இயக்குனர் ஆக மாறியிருக்கிறார் காவேரி.
கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் அவரே தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறார்.
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையாம். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசரை கௌதம் மேனன் இன்று வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.