மாற்றான் ஏமாற்ற மாட்டா(ர்)ன்? – கோடம்பாக்க பரபரப்பு

     மிழ்த் திரையுலகில் இந்த மாதம் பரபரப்பான மாதமாக இருந்து வருகிறது. காரணம் இரண்டு படங்கள். ஒன்று விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’, மற்றொன்று சூர்யா நடிக்கும் ‘மாற்றான்’.

துப்பாக்கி படத்தின் தலைப்புப் பிரச்சனை நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருவதால் பெயர் மாறுமா , மாறாதா என ஒரு பட்டிமன்றமே நடந்து வருகிறது.

மாற்றான் படத்தைப் பொறுத்த வரையில் கதையே பிரச்சனை. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய, தாய்லாந்து நாட்டுப் படமான ‘அலோன்’ படத்தின் தழுவல்தான் இந்த படம் என ஒரு செய்தி பரவி வந்த நிலையில் ‘அலோன்’ படத்தை அதிகாரபூர்வமாக தழுவி எடுக்கப்பட்ட ‘சாருலதா’ படம் கடந்த வாரம் வெளியாகியது.

சாருலதா படம் விளம்பரம் வெளிவந்த அன்றே உடனடியாக ‘மாற்றான்’ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது படத்தைப் பற்றிய பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். சாருலதா படத்தின் ரிசல்ட் தற்போது மாற்றான் குழுவினரை உற்சாகமடைய வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் வெளிவர இருக்கும் மாற்றான் படத்திற்கான வியாபாரம் கடந்த சில நாட்களாக சூடாக நடைபெற்று வருகிறது. கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணி அயன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு  அதிகமாகவே உள்ளது.

ஒவ்வொரு ஏரியாவிற்கும் மிகப் பெரிய விலை பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது வினியோகஸ்தர்கள் மத்தியில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் நடிக்கும் துப்பாக்கி படமும் விரைவில் வெளிவர இருப்பதால் , அவரது படங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஓபனிங்கும் , மாற்றான் படத்தை வாங்க இருக்கும் வினியோகஸ்தர்களை யோசிக்க வைக்கிறது.

இதுவரை வெளிவந்த சூர்யா படங்களை விட இந்த படம் மிகப் பெரிய அளவில் விற்கப்படலாம் என திரையுல வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏறக்குறைய 100 கோடியை தொடலாம் என்கிறார்கள்.

தற்போது கோடிகளில் புரள ஆரம்பித்துள்ள தமிழ் சினிமாவில் ‘மாற்றான்’ எத்தனை கோடிகளை அள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read Previous

‘மும்பை தமிழன்’ – விஜய் ?

Read Next

ஆர்யா தம்பி நடிக்கும் ‘புத்தகம்’