‘3 D’ யில் கலக்க வர்றாள் ‘காஞ்சனா’

     ராகவா லாரன்ஸ் இயக்கம் , நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த ‘காஞ்சனா’ திரைப்படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது இந்த படத்தை ‘3 டி’ தொழில்நுட்பத்துக்கு மாற்றும் பணிகள்  நடைபெற உள்ளன.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளர் பெல்லம்கொன்டா சுரேஷ், இத் தகவலை உறுதி செய்தார். 3டி க்காக ராகவா லாரன்ஸ் புதிய பாடல் ஒன்றையும் சேர்க்க உள்ளதாகவும், இந்த 3டி தொழில்நுட்பம் மாற்றம் ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.

இது பற்றி ராகவலா லாரன்ஸ் தெரிவிக்கையில், “தற்போது நான் இயக்கியுள்ள ‘ரிபெல் ’ தெலுங்கு திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டு வேலையில் பிஸியாக இருப்பதால், காஞ்சனா பற்றிய தகவல்களை தற்போது தெரிவிக்க இயலாது, ஆனால் நாங்கள் காஞ்சனா படத்தை 3டி க்கு மாற்றி வெளியிட இருப்பது உண்மைதான்” என்றார்.

ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான ‘சிவாஜி’ படமும் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவர தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

‘சிவ தாண்டவம்’ ரிலீஸ் தள்ளி வைப்பு ?

Read Next

‘சொட்டவாளக்குட்டி’யில் ஹன்சிகா ?