‘சொட்டவாளக்குட்டி’யில் ஹன்சிகா ?

   களவாணி, வாகை சூடவா, படங்களை அடுத்து சற்குணம் இயக்கவிருக்கும் படம் ‘சொட்டவாளக்குட்டி’.  தனுஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

கதாநாயகியை தேர்வு செய்வது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாகியாக ஹன்சிகாவை நடிக்க வைப்பது சம்பந்தமான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாக கோடம்பாக்கத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நாயகியாக நடித்தார். தற்போது ‘சேட்டை’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இது தொடர்பாக ஹன்சிகா தெரிவிக்கையில் தற்போது தமிப்படங்களுக்காக ஐந்து கதைகளை கேட்டதாகவும், அதில் சொட்டவாளக்குட்டி படமும் ஒன்று,  இரண்டு தமிழ்ப்படங்களில் நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும், அதைப் பற்றிய விவரங்களை  விரைவில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read Previous

‘3 D’ யில் கலக்க வர்றாள் ‘காஞ்சனா’

Read Next

ஷங்கரின் ‘ஐ’ – ரொமான்டிக் த்ரில்லர் ?