ஷங்கரின் ‘ஐ’ – ரொமான்டிக் த்ரில்லர் ?

      நண்பன்  படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி,  சந்தானம் மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை ஆஸ்கர் பிலிமிஸ் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

அந்நியன் படத்திற்குப் பிறகு, இயக்குனர் ஷங்கர், விக்ரம் இந்த படத்தில் இணைந்து பணி புரிகிறார்கள். இருவருமே அவரவர் திறமையை இந்த படத்தில் அதிக பட்சமாக வெளிப்படுத்தி வருகிறார்கள் என ‘ஐ’ வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தில் எமி ஜாக்சன் தவிர வேறு ஒரு ஹீரோயினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.

சீனாவில் நீண்ட நாட்கள் நடக்கும் படப்பிடிப்புக்காக   ‘ஐ’ குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுச் சென்றனர்.  அங்கு எட்டு நகரங்களில் படத்தின் படப்பிடிப்பு நடை பெற உள்ளது.  இது வரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களும் அதில் அடங்கும்.

ஷங்கர் இதுவரை இயக்கியுள்ள  படங்களில் பல புது லொகேஷன்களை தமிழ் சினிமாவில் காட்டி பிரமிக்க வைத்தவர். இந்த படத்தில் அது மேலும் அதிகமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் கதை பற்றி கிளம்பிய வதந்திகளுக்கும் ஷங்கர் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அவருடைய சமூக வலைத் தளத்தில் , “இந்த படம் அரசியல் படமோ, அல்லது தேர்தல் பற்றிய படமோ அல்ல, இது ஒரு முழுமையான காதல் த்ரில்லர் படம்தான்”, என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

‘சொட்டவாளக்குட்டி’யில் ஹன்சிகா ?

Read Next

‘பாஷாவும் நானும்’ – இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா