இன்று ‘டீல்’ ஆரம்பம்

     லை மலை, மாஞ்சா வேலு, தடையற தாக்க படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தன்னை ஒரு முன்னணி கதாநாயகனாக உயர்த்திக் கொண்ட அருண் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படம்  ‘டீல்’.

அறிமுக இயக்குனர் சிவஞானம் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு இசை தமன். ‘கோ’, ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படங்களுக்குப் பிறகு கார்த்திகா இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

“டீல் படம் ஒரு முழுமையான பொழுது போக்கு படம் , இப்படத்தின் கதையை கேட்டதுமே மிகவும்  பிடித்துப் போனது, நம் தினசரி வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்தும வார்த்தை டீல், கதைக்கும் இந்த டைட்டிலுக்கும் பொருத்தமாக அமைந்ததால் இந்த டைட்டிலை தேர்ந்தெடுத்ததாகவும் ,” அருண் விஜய் கூறினார்.

கார்த்திகாவிற்கு இந்த படத்தில் நாயகனுக்கு சமமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. அருண் விஜய் நடித்த முந்தைய வெற்றிப் படங்களிலும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘டீல்’ படத்தின் படப்பிடிப்பு சென்டிமென்டாக இன்று பழனி முருகன் கோவிலில் ஆரம்பமாகி , தொடர்ந்து தேனி, மற்றும் பல இடங்களில் நடை பெற உள்ளது.

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

மற்ற மொழிப் படங்களின் ஆதிக்கம் ?