தற்போது தமிழ்நாட்டில், தமிழ் தவிர மற்ற மொழித் திரைப்படங்கள் அதிக திரையரங்குகளில் வெளிவர ஆரம்பித்து விட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலை தொடர்ந்து வருகிறது.
சில நல்ல தமிழ்ப் படங்களுக்கு சிறிய திரையரங்குகள் கூட கிடைக்காத நிலையில் சில தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களுக்கு மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் உட்பட பல திரையரங்குகள் கிடைப்பது திரைப்பட ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டுவதாக அமைந்துள்ளன.
இன்று வெளியாகும் ‘ரிபெல்’ தெலுங்கு திரைப்படம் சென்னையில் மட்டும் ஏறக்குறைய 14 திரையரங்குகளில் வெளியாகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், பிரபாஸ், தமன்னா நடிக்கும் படம் இது.
இப்படம் சென்னையில், சத்யம், எஸ்கேப், எஸ் 2, ஐனாக்ஸ், அபிராமி, பிவிஆர், காசினோ, உதயம், ஏஜிஎஸ் (வில்லிவாக்கம்) , ஏஜிஎஸ் (ஓஎம்ஆர்), ஃபேம் நேஷனல், மாயா ஜால், சைதை ராஜ், அம்பத்தூர் ராக்கி போன்ற திரையரங்குகளிலும், கோயம்பேடு – ரோகிணி, போரூர் -கோபாலகிருஷ்ணா, காரப்பாக்கம் – அரவிந்த், ஊத்துக் கோட்டை – குமாரி, திருவள்ளூர் – மீரா, காஞ்சிபுரம் – பாபு போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் வெளியாகிறது.
இது இப்படியே தொடர்ந்தால், இன்னும் சில வாரங்களில் மற்ற மொழிப்படங்களுக்கு, தமிழ்த் திரையுலகத்தால் , கட்டுப்பாடு ஏதாவது விதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.