‘நீர்ப்பறவை’ இசை விரைவில்…

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் ‘நீர்ப்பறவை’ படத்தின் இசை குறுந்தகுடு மற்றும் திரை முன்னோட்டம் வரும் 10 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் சத்யம் திரையரங்கில் நடக்க இருக்கிறது.

இயக்குனர் பாலுமகேந்திரா, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் மற்ற திரைக்கலைஞர்களுடன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட இசை குறுந்தகடை ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுக் கொள்கிறார்.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் மூன்று தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் சீனுராமசாமி , இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன், வைரமுத்து வெற்றிக் கூட்டணி மறுபடியும் இந்த படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு, சுனைனா, ‘அழகி’ நந்திதா தாஸ், சரண்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்து, நெகிழ்ந்து, கிளைமாக்ஸ் காட்சியில் உருகி கண்ணீர் விட்டு இது அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறி ‘ U ‘ சான்றிதழ் வழங்கினர்.

Read Previous

‘திருடன்’ – விஜய் ஆண்டனி புதிய படம்

Read Next

நல்ல பெயர் வேண்டும் – காஜல் அகர்வால்