இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி, அடுத்து திருடன், சலீம் என இரு படங்களில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
நான் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘சலீம்’. “முதன் முதலில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் எனக்கு மிகவும் நெருக்கமாக அமைந்து விட்டதால் அந்தப் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து விட்டேன்,” என்கிறார் விஜய் ஆண்டனி.
இரு படத்திலும் ஒரே சமயத்தில் நடிக்க இருக்கிறார். மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.