விண்ணைத் தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், தயாரிப்பில் உள்ள நீதானே என் பொன்வசந்தம் படங்களைத் தொடர்ந்து ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனத்தினர் தற்போது ‘யான்’ என்னும் படத்தை தயாரிக்க இருக்கின்றனர்.
கதாநாயகனாக ஜீவாவும், கதாநாயகியாக மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ படத்தில் அறிமுகமாகும் நடிகை ராதாவின் இளைய மகளும், ‘கோ’ படத்தின் கதாதநாயகி கார்த்திகாவின் தங்கையுமான துளசி நடிக்கவிருக்கிறார்.
நாசர், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரேம்ஜி அமரன், தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு, சாபு சிரில் அரங்க அமைப்பு ,ஸ்ரீஹரி படத்தொகுப்பு , பிருந்தா நடன அமைப்பு செய்ய இருக்கிறார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார், ஜெயராம் ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கும் யான் படம், சென்னை, மும்பை, ஹைதராபாத், மற்றும் மொராக்கோ நாட்டின் தொன்மையான பகுதிகளிலும் படமாக இருக்கிறது.