‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உதயநிதி அடுத்து நடிக்கும் படத்தைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றி இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் அடுத்த படத்தில்தான் உதயநிதி நாயகனாக நடிக்க இருக்கிறார். சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் வெற்றிச் செய்தி வெளியில் வந்த உடனே இயக்குனர் பிரபாகரன் உதயநிதியை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
அது, இப்போது இந்த செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரி, 2013ல் ஆரம்பமாக உள்ளது.