‘மீண்டும்’ தமிழ் பேசும் த்ரிஷா…

 ன்றைய தமிழ்த் திரையுலகில் தமிழ் பேசும் கதாநாயகிகளைப் பார்ப்பது அரிதான ஒரு விஷயமாகி விட்டது. ஒரு சில கதாநாயகிகளே சொந்தக் குரலில் பேசி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சில கதாநாயகிகளில் ஒருவர் த்ரிஷா. இவரும் ஒரு சில படங்களில் மட்டுமே சொந்தக் குரலில் பேசி வருகிறார். மற்ற படங்களில் ‘டப்பிங்’ குரல்தான்.

தற்போது, மீண்டும் ஒரு படத்தில் தன் சொந்தக் குரலில் பேச உள்ளார் த்ரிஷா. விஷால் ஜோடியாக திரு இயக்கத்தில் நடிக்கும் ‘சமர்’ படத்தில்தான் சொந்தக் குரலில் ‘டப்பிங்’ பேசி வருகிறார்.

ஆய்த எழுத்து, மன்மதன் அம்பு, மங்காத்தா படங்களுக்குப் பிறகு த்ரிஷா இந்த படத்தில்தான் சொந்தக் குரலில் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read Previous

பொங்கல் வெளியீடாக ‘அலெக்ஸ் பாண்டியன்’

Read Next

‘மும்பை’யோட ராசி நல்ல ராசி…