ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’ .
கார்த்தி, அனுஷ்கா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். கலகலப்புக்கு சந்தானம் என ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது ‘அலெக்ஸ் பாண்டியன்’.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள அருமையான பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இறுதிக் கட்டப் பணியில் இருக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ கார்த்தியின் இன்னொரு பொங்கல் வெற்றி வெளியீடாக வெளி வர இருக்கிறது.