பையா, வேட்டை, வழக்கு எண் 18/9 வெற்றிப் படங்களைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கும்கி’. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுகிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரனும், பிரபு- வின் மகனுமான விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் நாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார். லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருக்கிறார். ‘மைனா’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம். இமான் இசையமைத்திருக்கிறார்.
தீபாவளிக்கு வெளியாகலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கும்கி’ படம் தற்போது டிசம்பரில் வெளியாகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அநேகமாக இப்படம் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துடன் மோதலாம் எனத் தெரிகிறது.
‘பட்டணத்து காதலா, காட்டுக் காதலா’ எது பட்டையக் கிளப்பப் போகிறது என பார்ப்போம்…