உடல்நலக் குறைவால் சிறிது காலம் நடிக்காமல் இருந்த மனோரமா தற்போது மீண்டும் நடித்து வருகிறார். ஹரி இயக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அது மட்டுமல்ல ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடிக்க இருக்கும் ‘ சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
38 வருடங்களுக்குப் பிறகு மனோரமா நடிக்கப் போகும் ஹிந்திப் படம் இது. 1974ம் ஆண்டு வெளிவந்த ‘குன்வாரா பாப்’ என்ற ஹிந்திப் படத்தில் அவர் நடித்திருந்தார். மெஹ்மூத், பாரதி, வினோத் மெஹ்ரா ஆகியோருடன் அவரும் நடித்திருந்தார். மனோரமா நடித்த முதல் ஹிந்திப் படம் இது.
வாங்க ஆச்சி, வாங்க. மீண்டும் கலக்குங்க…