‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அஞ்சலி. தற்போது, தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
தமிழில் முன்னணியில் இருந்தாலும், தெலுங்கு திரையுலகம் மட்டும் அவருக்கு ‘எட்டாக்கனி’யாகவே இருக்கிறது. காரணம், ஆந்திராவைச் சேர்ந்த அஞ்சலி நடிகையாக முதலில் அறிமுகமானது தெலுங்கில்தான்.
2006ம் ஆண்டு வெளிவந்த ‘ஃபோட்டோ’ என்ற படத்தில்தான் அறிமுகமானார். அடுத்து அவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படம் ‘பிரேமலேகா ராசா’. இரண்டு படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்து விட்டது அஞ்சலிக்கு.
பின்னர்தான் 2007ம் ஆண்டு வெளிவந்த ‘கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி தற்போது தெலுங்கில் , ‘சீத்தம்மா வாகிட்லோ ஸ்ரீமல்லே சேட்டு’, மற்றும் ‘பலுப்பு’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் சீத்தம்மா…படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் சமந்தாவும் நடிக்கிறார்.
‘பலுப்பு’ படத்தில் ரவிதேஜா ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இந்த இரண்டு படங்களும் அடுத்த மாதம் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
மேலும், தமிழில் ‘வத்திக்குச்சி’, ‘சேட்டை’,மதகஜ ராஜா’, ‘ஒன்பதுல குரு’, சிறப்புத் தோற்றத்தில் ‘சிங்கம் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.