‘அழகன்’ அரவிந்த்சாமியும் கடலுக்கு வந்துட்டாரு…..

     90களில் பல இளைஞிகள் தூக்கத்தைத் தொலைத்தவர் அரவிந்த்சாமி.  மணிரத்னம் இயக்கி, ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த சூப்பர் ஹிட் படமான ‘தளபதி’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து ரோஜா, மறுபடியும், பம்பாய், மின்சாரக் கனவு ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களில் காதல் நாயகனாக வெற்றிகரமாக வலம் வந்தவர். 1999ல் வெளிவந்த ‘என் சுவாசக்காற்றே’ படத்தில்தான் கடைசியாக காதல் நாயகனாக நடித்தார். திடீரென நடிப்பதை நிறுத்தி விட்டார்.  அவர் நடித்த ‘சாசனம்’ படம் வெகு தாமதமாக 2006ல் வெளிவந்தது.

அதன் பின் நீண்ட நாட்களாக அவரைப் பற்றி செய்தியே இல்லை. சில வருடங்களுக்கு முன்பிருந்துதான் திரைப்பட விழாக்களுக்கு வர ஆரம்பித்தார். அப்போதே அவரை பலர் நடிக்கக் கேட்டதாகவும் அவர் மறுத்ததாகவும் செய்திகள் வந்தன.

பின்னர், அஜித் , விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. கடைசியில் அதுவும் இல்லை என்றாகி விட்டது.

தற்போது, மணிரத்னம் இயக்கி வரும் ‘கடல்’ படத்தில் அவர் நடித்திருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  அவர் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

முதலில் கௌதம், அப்புறம் துளசி, அர்ஜுன், தற்போது அரவிந்த் சாமி, என ‘கடல்’ படத்தில் நடிப்பவர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்கள்.

மணி ஸார், ஓவரா ‘பில்ட் அப்’ பண்ணாதீங்க ஸார்…..சீக்கிரமே மொத்த லிஸ்டையும் கொடுத்துடுங்க….

 

Read Previous

‘காளையாக’ பாய்ந்து வருகிறார் சரண்…

Read Next

தவறுதலாக வந்தாலும் ஆசை..ஆசை..தானே…

Most Popular