‘லட்டு’ – லவ் பண்ணுவார்கள் – சந்தானம்

kltaந்தானம் தயாரிப்பாளராக மாறியுள்ள ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் இன்று வெளியாகிறது.

இந்த படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவும் அவதாரமெடுத்துள்ளார் சந்தானம். அவர் மட்டும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோக்களின் காதலுக்கு உதவியாக இருப்பது.

“எனக்கு நல்ல காமெடி படமா  ‘தி ஹேங்ஓவர்’ மாதிரி ஒரு படம் எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இராம. நாராயணன் என் கிட்ட கேட்டப்ப,  ஒரு பொன்னை, மூணு பேர் காதலிக்கிற கதை ஒன்னு எழுதி வச்சிருக்கேன்னு சொன்னன். அது பிடிச்சி போயி அவரும் அதே கதைய படமா தயாரிக்கலாம்னு சம்மதிச்சாரு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த படம்.”

இந்த படத்தின் மற்ற ஹீரோக்களாக சந்தானத்தின் நீண்ட நாள் நண்பர் சேது, பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறாங்க.

படத்துல சந்தானம் பேசற ‘பன்ச்’ டயலாக் ஒவ்வொன்னும் அதிரடியா இருக்கும்னு சொல்றாங்க.

ஹீரோயினா புதுமுகம் விசாகா அறிமுகமாகறாங்க.

தமன் இந்த படத்துக்கு இசையமைச்சிருக்காரு.

படத்தைப் பார்த்துட்டு ரொம்பவே ரசிச்ச, ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் படத்தை ரிலீஸ் பண்றாரு.

ஏறக்குறைய தமிழகம் முழுவதும் 200 திரையரங்குகளுக்கு மேலயும், வெளிநாட்டுல 50 திரையங்குகளுக்கு மேலயும் இந்த படம் ரிலீஸ் ஆகுது.

பொங்கல் படங்கள்ல இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

 

Read Previous

இன்றைய ரிலீஸ்

Read Next

சமர் – விமர்சனம்

Most Popular