சமர் – விமர்சனம்

தயாரிப்பு – ஜெயபாலாஜி ரியல் மீடியா பி.லிட்.

இயக்கம் – திரு

இசை – யுவன்ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம். நாதன்

படத்தொகுப்பு – ரூபன்

கலை – ஜாக்கி

வசனம் – எஸ். ராமகிருஷ்ணன், திரு

உடைகள் – வாசுகி பாஸ்கர்

சண்டைப் பயிற்சி – கனல் கண்ணன், நியோங்

நடிப்பு – விஷால், த்ரிஷா, சுனைனா, ஜே.டி. சக்ரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய், சம்பம், ஜெயபிரகாஷ், ஸ்ரீமன், ஜான் விஜய் மற்றும் பலர்.

வெளியான தேதி – 13 ஜனவரி 2013.

பொங்கலுக்கு வெளி வந்திருக்கிற படங்கள்ல ஒரு நல்ல படத்தையாவது பார்க்கணுமேன்னு நினைச்சோம், நல்ல வேளை டைரக்டர் திரு காப்பாத்திட்டாரு.

அடிச்சி சொல்லலாம், இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல பார்க்காத ஒரு கதைன்னு. பார்க்க  ‘விளையாட்டுப் பிள்ளை’ மாதிரி இருக்கிற இயக்குனர் திரு கிட்ட இப்படி ஒரு திறமை ஒளிஞ்சிருக்கிறது பாராட்டவேண்டிய ஒண்ணு. ஒரு வித்தியாசமான கதையை யோசிச்சதுக்கும், அதை கொஞ்சம் கூட குழப்பாமா தெளிவா கொடுத்ததுக்கும் ‘ஹேட்ஸ் ஆஃப்’.

படத்தோட கதை என்னன்னா, விஷால், சுனைனா ரெண்டு பேரும் காதலர்கள். ஆனால், சுனைனா எதிர்பார்க்கிற மாதிரி விஷால் நடந்துககாததால சுனைனா,  விஷாலோட இருக்கிற காதலை முறிச்சிக்கறாங்க. ஊரை விட்டு போய் பாங்காங்க்ல செட்டிலாயிடறாங்க.

மூணு மாசம் கழிச்சி திடீர்னு சுனைனா கிட்ட இருந்து , பாங்காக் வரச் சொல்லி லெட்டர் வருது பிளைட் டிக்கட்டோட. விஷால் பாங்காக் கிளம்பி போறாரு. ஆனால் அங்க சுனைனா, விஷாலை பார்க்க வரலை.

திடீர்னு, சிலர் விஷாலை கொலை பண்ண முயற்சி பண்றாங்க. ஆனால் வேற ஒரு குரூப் வந்து விஷாலை காப்பாத்திடுது. அவங்க விஷாலை ‘என்ன பாஸ் இப்படி நீங்க தனியா செக்யூரிட்டி இல்லாம வர்றீங்கன்னு’ , விஷாலை தாய்லாந்துலயே ஒரு பெரிய பிசினஸ்மேன்னு சொல்லி அதிர்ச்சியைக் கொடுக்கறாங்க. அதுக்கப்புறம் விஷாலுக்கு ராஜ மரியாதைதான்.

ஆனால், திடீர்னு ஒரு நாள் அந்த ராஜா மரியாதையும் இல்லாம போயிடுது.  தன்னை சுத்தி என்னமோ நடக்குதுன்னு குழம்பி, விமானப் பயணத்துல தன் கூட பழக்கமான த்ரிஷாவோட சேர்ந்து கண்டுபிடிக்க முயற்சி பண்றாரு…அது என்னன்கறதுதான் படத்தோட மீதி கதை…

இதுவரைக்கும் விஷால் கூட விதவிதமான ஆக்ஷன் கதையில நடிச்சிருப்பாரு. ஆனால் இப்படி ஒரு ஆக்ஷன் கதையில நடிச்சிருக்க வாய்ப்பில்லை. முதல்ல விஷாலுக்குதான் நன்றி சொல்லணும். இப்படி ஒரு வித்தியாசமான கதைல கண்டிப்பா நல்லா பர்ஃபார்ம் பண்ண முடியும்னு தேர்வு பண்ணி அதை கரெக்டாவும் பண்ணியிருக்காரு.

அவரைச் சுத்தி நடக்கிற புரிஞ்சிக்க முடியாத ஒரு ஆட்டத்துல அவரோட நடிப்பு எக்சலன்ட். புரிஞ்சும் புரியாத மாதிரி, தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறது சாதாரணமானதில்லை. அதை முகத்துல அற்புதமா கொண்டு வந்திருக்காரு. இப்படி வித்தியாசமான கதைய செலக்ட் பண்ணுங்க பாஸ், வெற்றி நிச்சயம்.

விஷால் கூட முதல் முறையா ஜோடி சேர்ந்துருக்காங்க த்ரிஷா. இரண்டு பேருக்கும் ஒரே ஒரு டூயட் பாட்டுதான்கறதுதான் ஒரு குறை. மத்தபடி விஷால், த்ரிஷா ரெண்டு பேருக்கும் இடையில வர்ற காதல் காட்சிகள்ல கூட ஒரு மெச்சூரிட்டி இருக்கு. த்ரிஷாவோட உடைகளுக்காக ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கரை ஸ்பெஷலா பாராட்டணும்.  நிஜமாவே த்ரிஷாவுக்கு வித்தியாசமான கேரக்டர். இன்னும் பத்து வருஷம் ஆனால் கூட ஹீரோயினா நடிக்கலாம்.

இன்னொரு ஹீரோயினா சுனைனா. ஆரம்பத்துல ஒரு சில காட்சிகள் மட்டும் வந்தாலும் அந்த மலை உச்சி சீன் எடுக்கப்பட்ட விதம் அழகோ அழகு.

படத்தோட வில்லன்களா மனோஜ் பாஜ்பாய், ஜே.டி. சக்ரவர்த்தி. அடுத்தவங்க வாழ்க்கையிலயும், உயிரோடயும் விளையாடற ‘பேட் பாய்ஸ்’. நமக்கே அடப்பாவிகளான்னு போட்டுத் தள்ளணும் போல இருக்கு.

ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், சம்பத், அழகம் பெருமாள், உமா பத்மநாபன் இவங்களும் இருக்காங்க.

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு ‘ரிச்சா’ அமைஞ்சிருக்கு. சில நேரம் தமிழ்ப் படம் பார்க்கறோம்கறதே மறந்து போயிடுது. நேர்த்தியான படத்தொகுப்புக்கு சொந்தக்காரர் ரூபன்.  எஸ். ராமகிருஷ்ணன் – திருவோட அளவா அருமையா எழுதப்பட்ட வசனங்கள். ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் அசத்தல்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில, அழகோ அழகு……, வெள்ளை மயில்….ரெண்டுமே ஹிட் வரிசைப் பாடல்கள்.

நல்ல வேளை தமிழ் சினிமா மீண்டும் பழைய பாதைக்கு போயிடுச்சோம்னு பயந்தோம், இல்லை இல்லை…நாங்க இருக்கோம்னு நிரூபிச்சிருக்காங்க…‘சமர்’ குழுவினர்….

சமர் – செம……

   

Read Previous

‘லட்டு’ – லவ் பண்ணுவார்கள் – சந்தானம்

Read Next

‘இது கதிர்வேலன் காதல்’ – இன்று ஆரம்பம்