மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடல்’ திரைப்படம் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்கும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
கடந்த வாரம்தான் இப்படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது.
சில நாட்களுக்கு முன் சென்னையில் ‘கடல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. விழாவிலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் , மணிரத்னத்திடம் கடல் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
டப்பிங் பணிகள் அநேகமாக முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிகிறது.
80களின் ‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடியின் வாரிசுகள் கௌதம், துளசி இந்த ‘கடல்’ படத்தில் அறிமுகமாகிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.