இயக்குனர் சுந்தர் .சி, விஷால், அஞ்சலி, வரு சரத்குமார் நடிக்கும் ‘மதகஜராஜா’ படத்தை முடித்து விட்டு அடுத்த படமான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை ஆரம்பித்து விட்டார்.
சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. சித்தார்த், ஹன்சிகா இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்களாக இப்படத்தில் நடிக்கிறார்கள். இருவரும் ஏற்கெனவே தெலுங்கில் இணைந்து நடித்திருந்தாலும் தமிழில் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.
முழுக்க, முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’.