‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் லோக்கல் பிளேபாயாக நடித்த கார்த்தி அடுத்து நடித்து வரும் ‘பிரியாணி’ படத்தில் மாடர்ன் பிளேபாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஸ்டுடீயோ க்ரீன் தயாரித்து வரும் படம் ‘பிரியாணி’. கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகாவும், நகைச்சுவைக்கு பிரேம்ஜியும் நடிக்கிறார்கள்.
‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளுடன் பிளேபாயாக கொண்டாட்டம் போட்ட கார்த்தி, பிரியாணி படத்தில் ஹன்சிகாவுடன் கொண்டாட்டம் போடுகிறாராம்.
கார்த்தியும், ஹன்சிகாவும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். அவங்க பண்ற சேட்டை, காமெடி, காதல், சண்டை எல்லாம் சேர்ந்ததுதான் பிரியாணியாம்.
இவங்க இரண்டு பேருக்கும் படத்துல கெமிஸ்ட்ரி ரொம்ப அழகா ஒர்க் அவுட் ஆகியிருக்காம்.
இதையெல்லாம் சொல்றது படத்தோட இயக்குனர் வெங்கட் பிரபுதான்.
பார்த்துங்க ஸார், இந்த படத்துலயாவது எந்த ஆபாசமும் இருக்கக் கூடாதுன்னு கார்த்தி ரசிகர்கள் மட்டுமில்லை, எல்லாருமே எதிர்பார்க்கறாங்க.