ஜெயம் ரவி, ஜீவா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் விரைவில் இணைந்து நடிக்கப் போகும் படம் ‘தூக்கு தண்டனை’.
இப்படத்தை இயக்கப் போகிறவர் எஸ்.பி. ஜனநாதன். இவர் ஜீவா நடித்த ‘ஈ’ படத்தையும், ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்தையும் இயக்கியவர்.
இவர்களிருவரையும் ‘தூக்கு தண்டனை’ மூலம் இணைக்கப் போகிறார். தமிழில் எப்போதாவது ஒரு முறைதான் இப்படி இரு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்கள் வருவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு ஓரளவிற்கு இப்படி ‘மல்டி ஸ்டார்’ படங்கள் வர வாய்ப்புள்ளன. ஏற்கெனவே, அஜித்தும், ஆர்யாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். விக்ரம், ஜீவா இருவரும் டேவிட் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படங்கள் ஹிட்டானால் தொடர்ந்து இம்மாதிரி இரு ஹீரோக்கள் நடிக்கும் படங்களை எதிர்பார்க்கலாம்.