பொங்கலுக்கு வந்த படங்களில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ அனைவரையும் கவர்ந்த படமாக வெற்றி நடை போட்டு வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்கள் சந்தானம் மற்றும் பவர்ஸ்டார். இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த பவர்ஸ்டார் இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடித்தது அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
இப்போது, சந்தானம் மற்றும் பவர்ஸ்டார் இணைந்து மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ‘யா யா’ என பெரியடப்பட்டுள்ள இந்த படத்தை ராஜசேகர் இயக்குகிறார். சிவா, சந்தானம் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இப்போது புதிதாக பவர்ஸ்டாரும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
அடுத்த வெற்றிக்கு இப்போதே தயாராகி விட்டார்கள்.