விஸ்வரூபம் படத்தின் வினியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியதாக கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் இருந்து வந்தது.
அதற்கு இன்று முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் உதயநிதி. விஸ்வரூபம் படத்தின் சேலம் ஏரியாவை மட்டும்தான் அவர் வாங்கியிருக்கிறார். மற்ற ஏரியாக்கள் விற்று விட்டதால் அவருக்கு சேலம் மட்டும்தான் கிடைத்திருக்கிறது.
பல பிரச்சனைகளுக்கு நடுவில் விஸ்வரூபம் படத்தின் வியாபாராம் அமோகமாக நடைபெறுவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.